பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைபயில் காதை

கரு


ஈன்றவள் மனத்திற் கொண்ட
இடரினைப் போக்கு தற்கோ
[1] தளர்ச்சி போக்கி
நன்கனம் நடப்ப தற்கோ
ஊன்றுகோல் ஒன்று பற்றி
உரத்துடன் நிமிர்ந்து நின்றான்
சான்றவர் போற்று மாறு
தண்டுகொண் டங்கு நின்றான்18

தலைமகன் இவனுக் குற்ற
தாழ்வினைக் கண்டு நொந்தாள்
இலை நிகர் இவனுக் கென்ன
இவனை நான் உயர்வு செய்வேன்
கலைமலி புலமை ஈவேன்
கதிரொளி பரவ' வென்று
தலையளி சொரிந்து நின்றாள்
தமிழன்னை அவனை நோக்கி19

தன்னுளே தங்கி நின்று
தனிநடம் புரியும் எங்கள்
அன்னையாம் தமிழ ணங்கின்
[2] எண்ணுந் தோறும்
இன்பெலாம் ஒருங்கு கண்டான்
இவன் மனம் உருகக் கண்டான்
அன்பெலாந் திரண்டு தாயின்
ஆரமு துண்டு வந்தான்20


  1. நான்றகால்
  2. அடிகளை