பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சபைகாண் காதை

௨௫

சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதிலை
துரண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை;
மலைக்காட்டில் திரிமயில்கள் தோகைதனை
வற்புறுத்திக் கூறுவதால் விரிப்ப தில்லை,
மலைக்கோட்டு மாமுகிலும் பிறர்சொல்லை
மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவ தில்லை;
தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து
தானுவந்து வழங்குவதே ஈகையாகும் б

குலவிவருஞ் செல்வத்தைப் பெட்டகத்துட்
குவித்தெடுத்துப் பார்ப்பதிலே என்ன கண்டோம்?
செலவுசெயத் தன்னலந்தான் வழியென்று
தனித்துண்டு வாழ்வதினான் என்ன கண்டோம்?
பலவிருந்தும் உண்பதுவும் உடுப்பதுவும்
ஒரளவே;1 பகுத்துணர்ந்தால் உண்மை தோன்றும்;
உலவிவரும் இயல்பினதைக்2 ஒடுக்காமல்
ஊர்நலத்துக் குதவிவரல் இன்ப மன்ருே? 7

ஈத்துவக்கும் இன்பத்தை நன்குணர்ந்த
இயல்புடையார் பலருண்டு செட்டி நாட்டில்;
சேர்த்தமைத்துத் தொகுத்திருந்து காத்துவரும்
செழுநிதியை வகுத்தளிக்க வல்லார் தம்முள்
வாழ்த்தெடுத்துப் பாடுதற்குத் தகுதியுளார்
வ. பழ. சா. பழநியப்பர் ஒருவ ராவர்
ஏத்துமவர்க் கு-ஒது பின்னிற்கும்
இளையவரண் ணுமலையும் ஒருவ ராவர் 8

1.உண்பது நாழி உடுப்பவை ரெண்டே - புறநானுறு 2. செல்வத்தை