பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬

ஊன்றுகோல்

அடியவர்பால், அருந்தமிழை யுணர்ந்தவர் பால்
அளப்பரிய பற்றுடையார்; அணுகி வந்த
மிடியவர்பால் இரங்குமனம் மிக்குடையார்;
மேலவரோ டுரையாடி மகிழுங் கொள்கைப்
பிடியுடையார் நெறியுடையார், பிறர்க்குதவும்
பேறுடையார்; சிவமுடையார்; நாளும் இந்த
நடையுடையார் பழநியப்பர்; பின்வந்த
நல்லவரும் அவ்வணமே ஒழுகி வந்தார் 9

கற்றுணர்ந்தார் நல்லுறவும், கலந்தாடிக்
களிக்கின்ற செவியுணர்வும், வல்லார் வந்து
சொற்றதிரு முறைநூல்கள் செவிமடுத்துச்
சுவைக்கின்ற புலனுணர்வும் ஒருங்கு சேரப்
பெற்ருெளிரும் பழநியப்பர் பெரிதுவந்து
பெரும்பொருளிழெங்கிவரும் உணர்வும் கொண்டார்;
பெற்றபொருள் பிறர்மகிழத் தாம்மகிழப்
பிரிப்பதுதான் இன்பமென உணர்ந்து கொண்டார் 10

சிவநெறியும் பொதுநலமும் செவியுணர்வும்
சேர்ந்துறையும் பழநியப்பர் வாழும் மேலைச்
சிவபுரிக்குக் கதிரேசர் செலுந்தோறும்
தெள்ளியரைச் சந்திப்பார் நல்லநல்ல
கவிதருவார் பொருள்தருவார்; சமயத்தின்
கருத்துரைப்பார்; பழகியஅந் நல்லார் நட்புக்
கவரிலதாய்ச் செறிவினதாய் வளர்ந்ததனால்
கலைமகளும் திருமகளும் இணையக் கண்டோம் 11