பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௮

ஊன்றுகோல்

தமக்காகத் தமிழ்வளர்ப்பார் சிலருண்டு
தமிழ்காக்கத் தமைவளர்ப்பார் சிலரும் உண்டு
நமக்கோஇவ் வுண்மைநிலை தெரியாது
நாவலிமை கொண்டவர்தாம் மயக்கி நிற்பர்;
தமிழுக்கே தமிழ்வளர்த்தார் தமைமறந்தார்
தம்பியையும் தமைதிற் பிணைத்துக் கொண்டார்
நமக்காக வாழ்ந்துவரும் பரம்பரையை
நாளெல்லாம் நினைந்துளத்தால் வாழ்த்து வோமே 15

கல்வியுடன் ஒழுக்கங்கள் பரவிவரக் கற்றுணர்ந்த
சான்றோராற் பொழிவு செய்தல்,
பல்வகையில் துண்டறிக்கை அவைபற்றி
அச்சிட்டுப் பலருக்கும் பயன்கொ டுத்தல்,
சொல்வளமை கொண்டிலங்கும் ஆசானைத்
துணைக் கொண்டு மாணவர்க்குப் பயிற்று வித்தல்,
நல்லுணவும் உறைவிடமும் பயில்பவர்க்கு
நல்கி உயர் தமிழ்கொடுத்தல் சபையின் நோக்கம்

16
எங்கெங்கே தமிழ்ச்சான்றோர் தமிழ்நாட்டில்
இருக்கின்றார் அவரெல்லாங் குழுமி வந்து
சங்கங்கள் மொழியாய்ந்த செயல்போலத்
தமிழாய்ந்து நூலாய்ந்து கண்ட வற்றை
இங்கெங்கள் செவிகுளிர மனங்குளிர
இனிதளித்தார் மகிழ்வித்தார் ஏற்றந் தந்தார்;
பொங்குங்கள் மலர்மணம்போல் இச்சபையின்
புகழ்மணமும் பரவிற்றுப் பூமி எங்கும். 17