பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணம் புணர் காதை

௩எ


கல்விவளம் பரப்புவதாற் கதிரேசர்
புகழ்மணந்து காணும் செவ்வி
செல்வவளங் குறியாகக் கொண்டோர்க்குச்
செவ்வையுறத் தெரிய வில்லை;
அவ்வளவில் ஒருமணத்தைப் பொருட்டாக
அவர்மனத்திற் கொள்ளா ராகி
எவ்வகையில் தமிழ்மணக்கச் செய்வமென
எந்நாளும் எண்ணி நின்றார். 6

செல்வாக்குப் பரவிவரப் புகழ்ச்செல்வம்
சேர்ந்துவ அத்தை வீட்டார்
நல்வாக்கு கொடுத்தார்கள் மகட்கொடைக்கு
நாளடைவில் மாறி விட்டார்
இல்வாழ்க்கைத் துணைவியென முதன்மகளை
ஈவதென்று சொன்ன சொல்லை
அல்வாக்கென் றாக்கியவர் வேறிடத்தில்
அம்மகளைக் கொடுத்து விட்டார்.7

முன்னவள்பேர் கலியாணி, அம்மகளை
மொய்த்தமலர் சூட்டு தற்குச்
சொன்னமொழி மாறியது நெஞ்சத்தைச்
சுட்டதனால் திருந்தி வந்து,
மின்னுமெழில் முகத்தாளைக் குணமிகுந்த
மேலாளைக் கலியா ணிக்குப்
பின்னவளை மீனாட்சி எனப்பகரும்
பேராளைத்தரநி னைந்தார். 8