பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்று கோல்


கண்முனம் படரா ஒன்றைக்
கருத்தினுள் படைத்துக் கொண்டு
நண்ணுமவ் வுலகிற் புக்கு
நலிவெலாம் மறந்தே இன்பப்
பண்ணுயர் பாடல் பாடிப்
பறந்தவண் திரிவா னுக்கு
[1]மண்படும் வாழ்வா வந்து
மனத்தினில் தோன்றி நிற்கும்?21

தான்படுந் துயர்ம றப்பான்
தன்னினந் தனைநி னைப்பான்
வான்படு பொருளை யெல்லாம்
வாரிவந் தவர்கள் வாழ்வு
மேம்படக் கொடுப்பான் போல
மேவுமப் பித்தன் கண்ணில்
ஏன்படும் உலக வாழ்க்கை ?
ஈதவன் இயற்கை யாகும் 22

கற்பனைப் பித்தன் போலக்
கதிர்மணி வாழ்ந்தா ரல்லர்:
பிற்படும் புலவ ரெல்லாம்
பெருமையே கொள்ளு மாறு
நற்புகழ் அரசர் போற்ற
நண்பரும் ஆகி நின்று
பற்பலர் போற்றும் வண்ணம்
பாரினைத் தெரிந்து வாழ்ந்தார்23


  1. மண்ணுலக வாழ்வு, மண்ணான வாழ்வு