பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



விழாப் பதிப்புரை

பண்டிதமணி நூற்றாண்டு விழாக் குழுவினர் இந்நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாகப் பண்டிதமணியாரின் நூல்களையெல்லாம் மறுபடியும் பதிப்பித்து இவற்றைத் தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்யவேண்டும் எனவும் அதன்மேலும் இப்பெரும் புலவரின் நூல்களைத் தக்கோரால் திறன்செய்து அத்திறனுால்களையும் தமிழாக்கம் பெற வெளியிடல் வேண்டும் எனவும் நன்முடிவு கொண்டனர்.

அண்மைக்காலத்துப் பெருந் தமிழ்ப்புலவர் பலரின் நூற்றாண்டு விழாக்கள் சோனை மாரிபோல நாடெங்கும் கொண்டாடப் பெறுகின்றன. கொண்டாடுவது கொண்டாடத்தக்கது என்றாலும், அவ்வளவில் ஒருநாளே ஆர்வமாக அது கழிகின்றது. விழாச் செலவுக்கு ஏற்ற தொடர்குறியும் தமிழ்நிலையும் இல. அப்புலவர்தம் படைப்புக்களை வெளியிடுவதையும் விழவயர்வின் ஒரு பாங்காகக் கடைப்பிடித்தால் அவர்தம் நூல்கள் வழிவழிக் கிடைக்கும். பின்னும் பின்னும் அச்சகப் படிகளும் தடலின்றிக் கிடைக்கும். புலவர்களின் அறிவுடைமைகள் பொதுவுடைமைகள் அல்லவா?

இக்குறைபாடு பண்டிதமணியார்க்கு வாராதபடி, அவர்தம் எழுத்துடைமைகள் மறுமை பெற்றுக் காக்கப்படுகின்றன. ஆய்விற்சிறந்தோர் எழுதிய திறனூல்களும் ஆக்க நூல்களும் உடன்வருவதால், அணை நீர் பெறும் யாறுபோல இவ்விழாவினால் தமிழ் ஊட்ட பெறுவதை அறியலாம். இவ்வெளியீடுகட்குப் பல்லாயிரத் தொகை நன்கொடை வழங்கும் தமிழ்ப் பாரிகட்குப் பெரிதும் நன்றியுடையோம். வண்மையின்றித் தமிழ்வளம் பெற்றதில்லை.

பண்டிதமணியின் பனுவல்களும் திறனூல்களும் மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைக்கே உரிமைய. ‘என்னை இப்புகழ்நிலைக்கு உருவாக்கியது சபையே’