பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெறியுணர் காதை

௪௫


சமயத்தை நன்குணர்ந்து திளைத்துத் தோய்ந்து
தளராத செம்பொருளைக் கண்ட சைவர்;
உமைநத்தும் இறைவனடி மலரை என்றும்
ஒருமையுடன் நினைந்துருகும் துாய நெஞ்சர்,
தமைமுற்றித் துயரங்கள் சூழ்ந்த போதும்
தண்புனல்சேர் சடையான்பால் முறையிட் டாங்கண்
சுமைமுற்றுந் தவிர்ந்ததுபோல் இன்பங் காண்பார்;
சுடர்மணியார் மெய்ச்சமய நெறியில் நின்றார் 3

அன்புவளர் சமயத்தை விழைந்த தன்றி
ஆரிப்பாட்டச் சமயத்தை விரும்ப வில்லை,
என்புருக இறைவனடி தொழுத லன்றி
ஏமாற்று வேலைக்குக் கொள்ள வில்லை;
பொன்பொருள்கள் வருமென்று பற்ற வில்லை
பொலிமனத்துத் துய்மைக்கே பற்றி நின்றார்,
புன்மையென வாழ்க்கையினே வெறுக்க வில்லை
புணையாக அதைப்பற்றி வாழ்ந்து வந்தார் 4

உள்ளத்தாற் பொய்யாது சிவனை எண்ணும்
உயர்சமயம் இவர்கொண்ட சமய மாகும்;
கள்ளத்தார் கயமையினர் கரந்து வாழக்
கண்டமதம் இவர்கொண்ட மதமே யன்று;
வெள்ளைத்தூள் பொடிபூசும் மெய்ய ரேனும்
வேடத்தைத் திருவுளத்தும் நினைந்தா ரல்லர்:
எள்ளித்தான் சமயத்தை நகைக்கும் பாங்கில்
எச்செயலும் என்றுமவர் கொண்ட தில்லை 5