பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயக்குறாக் காதை


தரிசித்து வாவெனத் தணிகை முருகன்
கட்டளை யிட்டனன்; கந்தன் ஆணையைத்
தலைமேற் கொண்டிவன் [1] வருகை தந்தனன்;
எனுமுரை கேட்ட இப்பெரும் புலவர் 50
நனிமிக மகிழ்ந்து ‘நல்லீர் உலகில்
எத்தனை எத்தனை அன்பர் இருக்கப்
பத்தியில் எளியேன் பக்கல் வருகென
முருகன் பணித்தது முன்னேப் பிறவியின்
வருபெரும் பேறே! வாய்மலர்ந் தின்னும் 55
உத்தர வாக வேண்டு மென் றோதினர்;
‘சற்றுப் பொறுக்க’ எனக்கை காட்டி
முற்றிய வேடர் மோனங் கொண்டுபின்
‘முருகா முருகா’ என்று மொழிந்தனர்,
‘அருளுக முருகா அருளுக’ எனக்கனிந் 60
திருமொழிப் புலவர் இயம்பக் கேட்டுக்
‘கடம்பன் கட்டளை கதிர்செலும் மாலை
வெளியிடப் படு’மென விளம்பினர் பத்தர்:
பகலுண வுண்டு பத்தர் உறங்கி
மிகமகிழ்ந் தெழுந்து மேலவர் கோலம் 65
தாங்கி வந்து தரிசனம் தந்தனர்
ஆங்கவர் வருங்கால் ஒங்குயர் வடமொழி
பாங்குடன் அறிந்தவர், பண்டித மணியுடன்
கலந்துரை யாடி யிருத்தலை கண்டே
உளந்திறந் தாட அவர் இடை யூறாய் 70
இருத்தலைக் குறிப்பால் உணர்த்தினர் பத்தர்;
வடமொழி யாளர் படர்ந்ததற் பின்னர்
தடநுதல் நீற்றினர் தனித்துப் பேசினர்;
'முருகா முருகா முகவை நகருக்


  1. பத்தர் தமையே இவன் என குறிப்பிடுகிறார்