பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


கருகே அமைந்த சிற்றுார் இவனுார்; 75
நெடுநா ளாக இவன்மனம் நினைந்து
படருமோர் ஆசை பற்றி யுள்ளான்;
இரந்து பெறாமல் இருக்கும் பொருளால்
உரங்கொளும் வேலற் கொருபெருங் கோவில்
எழுப்பும் ஆசையால் இருந்தஐ யாயிரம் 80
முழுக்கத் தீர்ந்தும் முற்றுப் பெற்றிலாச்
செயலால் வருந்திச் சேவற் கொடியோன்
செயலே யாக என இவன் நினைந்து
முருகன் தலைமேற் பொறுப்பை ஏற்றி
வரும்நாள் ஒருநாள் வடிவேல் முருகன் 85
கனவில் தோன்றிக் ‘கவலை கொள்ளேல்
எனக்கோர் ஆலயம் எடுக்க நினைந்தனை
மனத்தெழும் ஆசைக்கு மற்றவ ரிடத்தே
இரந்து பொருள்பெறல் இழுக்கென எண்ணினை
உறுதிப் பாட்டினை உளத்தாற் போற்றினேன்; 90
உன்போல் அன்பன் ஒருவன் ஆங்குளன்
அன்பன் அவன்பொருள் உன்பொரு ளாகும்
வேறென நினைத்தல் வேண்டா, நாளையே
[1] சேறி மகிபால புரிக்கெனச் செப்பிக்
கதிரேச அன்பனைக் கண்டென் கட்டளை 95
இதுவெனக் கூறு; புதுவகை அன்பால்
ஐயா யிரமவன் அளிப்பான் நின்னிடம்
மெய்யான் அவன்தரும் ஐயா யிரமும்
பெற்று வந்து முற்றா திருக்கும்
நற்றிருப் பணியை முற்றுறச் செய்க’ 100
கட்டளை யிதனக் கந்தன் அருளினன்
ஆங்கவன் கட்டளை தாங்கி வந்ததை


  1. செவ்வாய்