பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஒரு முறை ஒரு மனிதனைக் காட்டின் மத்தியில் கண்டேன்.அவன் கையிலே கனத்த தடி இருந்தது.முயல் வேட்டைக்கு வந்திருப்பான் போலிருக்கிறது.அவனைப் பார்த்ததும்,நான் என்னைத்தான் அவன் தாக்க வருகிறான் என்று நினைத்து, ‘உர்! உர்!’ என்றேன். உடனே அவன் தப்பித்துக் கொள்ளத் தடியை ஓங்கினான். மறு விநாடி நான் அவன் மேல் பாய்ந்தேன். அப்போது அவனுடைய இரத்தத்தை ருசி பார்த்து விட்டேன். ஆஹா, என்ன ருசி! என்ன ருசி! அது மாதிரி ருசியான இரத்தத்தை நான் குடித்ததே இல்லை. அதுமுதல் மனிதனை நான் எங்கே கண்டாலும் விடுவதில்லை.