பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8.ஆடுவோம் பாடுவோம்

ஓடி ஓடி ஆடுவோம்
ஒன்று கூடிப் பாடுவோம். - ஓடி ஓடி

காக்கை குருவி போலவே
கலந்து நாமும் வாழவே - ஓடி ஓடி

குயிலும் மயிலும் போலவே
கூடி இருந்து வாழவே - ஓடி ஓடி

அண்ணன் தம்பி போலவே
அன்பு செய்து வாழவே - ஓடி ஓடி

8