பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. சேவல்
கொக்கரகோ-கொக்கரகோ

சின்னஞ் சிறுவர்களே
இன்னும் உறங்குவதோ ―கொ
பொழுது விடிந்தது பார்
பூவும் மலர்ந்ததுபார் ―கொ
காலை எழுந்திருப்பீர்
கடவுள் பதம்தொழுவீர் ―கொ
பாடம் படித்திடுவீர்
பணமே குவித்திடுவீர் ―கொ
நாடு செழித்திடவே
நாளும் உழைத்திடுவீர் ―கொ

11