பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16. வேண்டும்

ஓங்கி வளர வேண்டும்;
உடம்பு வலுக்க வேண்டும்.

ஆடை அணிகள் வேண்டும்;
அறிவு மிகவும் வேண்டும்.

கல்வி கற்க வேண்டும்;
காசு சேர்க்க வேண்டும்.