பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22. திரு.வி.க தாத்தா

காந்தியத்தைப் போற்றி வளர்த்தவர்
திரு. வி. க. தாத்தா !
கடவுள் நெறியில் கருத்துடன் வாழ்ந்தவர்
திரு. வி. க. தாத்தா !
சாந்தக் குணத்தவர் தீந்தமிழ் மொழியினர்
திரு. வி. க. தாத்தா !
மாந்தருள் தாழ்ந்தவர் இலரெனப் பகர்ந்தவர்
திரு. வி. க. தாத்தா !
பெண்ணின் பெருமையைப் போற்றி மகிழ்ந்தவர்
திரு. வி. க. தாத்தா !
பேச்சிலும் எழுத்திலும் பின்னடை யாதவர்
திரு. வி. க. தாத்தா !
எண்ணில் ஏழைகள் நலனுற உழைத்தவர்
திரு.வி.க தாத்தா!
இளைஞர்கள் வாழ்ந்திட வழிவகுத் துரைத்தவர்
திரு.வி.க தாத்தா!

23