பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31

25. அன்னை அன்பு

என்னைப் பெற்ற நற்றாயே,
எங்கே அன்பு கற்றாயே?

'என்றன் கண்ணே' என்பாயே,
எனக்குத் தந்தே தின்பாயே.

கண்டால் முத்தம் அளிப்பாயே,
கட்டி அனைத்துக் களிப்பாயே.

ஆடை அணிகள் தரிப்பாயே,
அழகு பார்த்துச் சிரிப்பாயே.

'அம்மா, தலைநோய்' என்றாலும்
அலுத்துக் களைத்து நின்றாலும்,

அழுது கண்ணீர் வடிப்பாயே,
அன்பால் நெஞ்சம் துடிப்பாயே.

தெய்வம் என்றே துணிவேனே,
தினமும் பாதம் பணிவேனே.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.