பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



26. அப்பாவைப்போல் நான் ஆனால்

அப்பா வைப்போல் நான்ஆனால்
ஆயிரம் ரூபாய் சேர்த்திடுவேன்;
ஆனை குதிரை வாங்கிடுவேன்.

அப்பா வைப்போல் நான்ஆனால்
மாடி வீடு கட்டிடுவேன் ;
மோட்டார் வண்டி வாங்கிடுவேன்.

அப்பா வைப்போல் நான்ஆனால்
தண்ணீர்ப் பந்தல் வைத்திடுவேன்;
தருமம் பலவும் செய்திடுவேன்.

அப்பா வைப்போல் நான்ஆனால்
எங்கும் பொன்னே குவித்திடுவேன்;
எல்லோ ருக்கும் அளித்திடுவேன்.

அப்பா வைப்போல் நான்ஆனால்
உலகம் முழுவதும் சுற்றிடுவேன்;
உண்மை பலவும் கற்றிடுவேன்.

28