பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29. பன்னிரண்டு மாதங்கள்

தமிழ் மாதங்கள்

சித்திரை யோடு வைகாசி

சிறந்த நல்ல இளவேனில் ;

ஆனி ஆடி மாதங்கள்

அப்பா! மிகவும் முதுவேனில் ;

ஆவணி யோடு புரட்டாசி

ஆகா! அழகிய கார்காலம் ;

ஐப்பசி கார்த்திகை வந்தாலோ

அந்தோ மிகவும் குளிர்காலம் ;

மார்கழி மாதம் தைமாதம்

முன்னே பனிதான் பெய்மாதம் ;

மாசி பங்குனி மாதங்கள்

பின்னே பனிபெய் மாதங்கள்.

32