பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/42

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34.பொன் முரசு

கொட்டிடு கொட்டிடு முரசே-எங்கள்
      கொள்கை இதுவென்று முரசே.
      
வித்தையில் வல்லவர் ஆவோம்-மிக்க
      வீரர்கள் என்னவே வாழ்வோம் ;
நித்தமும் கொட்டிடு முரசே-எங்கும்
      நிற்காமல் கொட்டிடுமுரசே.

(கொட்டிடு)

அண்ணனும் தம்பியும் போலே-நாங்கள்
      அன்புடன் இங்கிருப் போமே ;
திண்ணம் இதுகொட்டு முரசே-ஒரு
      தீங்கு புரிந்திடோம் முரசே.

(கொட்டிடு)

ஏழை பணக்காரர் என்றே-இல்லை
      எங்களுக் குள்யாரும் ஒன்றே ,
தோழர்கள் நாங்கள் நன்முரசே-கொட்டு
      தொம்தோம் எனவேபொன் முரசே.

(கொட்டிடு)

உண்மை உரைத்திட அஞ்சோம்-உண்ணும்
      உணவுக் கொருநாளும் கெஞ்சோம் ;
‘தண்தண தணதண’ எனவே-சற்றும்
      தயங்காமல் கொட்டிடு முரசே.

(கொட்டிடு)

40