பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36. உடற் பயிற்சி

வீமனைப் போல்வலு வேண்டும்-நல்ல
      வீரமும் தீரமும் வேண்டும்-ரகு
ராமனைப்போல் குணம் வேண்டும்-அந்த
      ராவணன் ஆண்மையும் வேண்டும்.1

சேவல் செருக்கினைக் காணீர்-அதன்
      செல்வ நடைகண்டு நாணீர்-என்றும்
ஆவ லுடனுழைப் பீரேல்-மிக்க
      ஆரோக்கி யம்பெறு வீரே.2

கூனற் குரங்குகள் போல-உடல்
      குன்றி யிருந்திடல் ஆமோ ?-அவ
மானமி தென்ன விடுப்பீர்-நிதம்
      மார்பு நிமிர்ந்து நடப்பீர்.3

கட்டையும் வெட்டுதல் வேண்டும்-அதைக்
      கட்டிச் சுமந்திடல் வேண்டும்-சிறு
பெட்டி எடுத்திடக் கெஞ்சும்-ஒரு
      பேதையைக் கண்டுல கஞ்சும்.4

பொய்ம்மை புனைந்துரை யாடீர்-இகழ்
      பூனைக் குணந்தனைத் தேடீர்-உயர்
மெய்ம்மை யினுக்குண்டு மேன்மை-வேறு
      மேதினி யில்இலை ஆண்மை.5


43