பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

<poem>மல்லர் உடலுரம் வேண்டும்-உயர்

     மார்பும் அகன்றிடல் வேண்டும்-மிக நல்லவர் என்றுல கேத்த-நிதம்
     நன்மைகள் நாடிடல் வேண்டும்.

சற்குணங் கள்பல பெற்றார்-வித்யா

     சாகரர் என்னும்அக் கற்றார்-அவர் பொற்குணம் யாவும் பெறுவோம்-புவி
     போற்றும் புகழும் உறுவோம்.

தோள்கள் பருத்திடல் வேண்டும்-உயர்

     தூய்மைக் குணங்களும் வேண்டும்-பல நாள்கள் கழித்திடல் நன்றோ?-நந்தம்
     நாடு செழித்திடல் என்றோ?

அல்லும் பகலும் உழைத்தே-பச்சை

     யப்பனைப் போலத் தழைத்தே-பல நல்லறம் நாடிப் புரிவோம்-இந்த
     நன்மதி யாவும் மறவோம்.<\poem>

7