பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3. தந்தையும் மகனும் :

தோழனுடன் டில்லியெனும் தொன்னகரம் சென்றான்; வேழமதை வெல்லுமொரு சிங்கமென நின்றான்.

சிறையிருக்கும் தந்தையினைச் சிறுவனவன் கண்டான் ; முறைமையினால் முடிவணங்கிப் பணிவுமிகக் கொண்டான்.

"தந்தையுமைச் சிறையெடுக்க தனயன் இதோ வந்தேன் ; சிந்தைமகிழ் கொள்ளவரம் தந்தருளும் உய்ந்தேன்.”

பிள்ளைமுகம் பார்த்தபிதா பேருவகை யுற்றார்; வெள்ளமெனப் பொங்கிஎழும் வேட்கைமொழி சொற்றார்.

தவமகனே, நின் குணத்தின் தன்மையது நன்றே! குவலயத்தோர்க் கடங்கிவிடும் குதிரைஇது அன்றே!

சிலதினமே சிறைவாசம் செய்தவன் நான்மகனே! நலமுடனே சென்றிடுவாய் நாட்டினுக்கே உடனே.”


57