பக்கம்:எங்கே போகிறோம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் 101

உற்பத்தி, 3,37,500 டன்னாக உயர்ந்துள்ளது. இது தவிரக் கோழிப் பண்ணை வளர்ப்புத் தொழிலால் 1961-ல் 650 கோடி ரூபாய் மதிப்பிலிருந்தது, 1989-ல் ரூ. 34,54 மில்லியன் ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றையும்விட இந்தியாவில் கால்நடைகள் அதிகம். உலகத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையில் சற்றேறக் குறைய 21 விழுக்காடு நமது நாட்டில் உள்ள கால்நடைகள்.

கால்நடைகளில் முதன்மையானது பசு. நமது சமுதாய மரபுப்படி பசு, பூசனைக்குரியது. ஆயினும் பசுக்கள் வளமாக வளர்க்கப்படுவதில்லை.

நமது நாட்டில் 17.6 கோடி பசுமாடுகள் உள்ளன. எருமைகள் 5.3 கோடி உள்ளன. ஆக 22.9 கோடி மாடுகள். இவற்றில் காளை-கிடா ஆகியவற்றைக் கழித்துக் கணக்கிட்டதில் 8 கோடி பால்மாடுகள் உள்ளன.

இந்த 8 கோடி பால் மாடுகளில் 2.4 இலட்சம் பால் மாடுகள்தான் தினசரி 2 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கின்றன. பாக்கி 5.6 இலட்சம் பால் மாடுகள் தினசரி 2 லிட்டருக்கும் குறைவாகவே பால் கறக்கின்றன.

நம் நாட்டுப் பசுக்கள் வருடம் சராசரி 175 கிலோ கிராம்தான் பால் கறக்கின்றன. எருமைகள் வருடம் சராசரி 440 கிலோ கிராம் பாலே கறக்கின்றன. இந்த அளவு, அறிவியல் சார்ந்த முயற்சியால் 5431 லிட்டராக உயர்த்தப்பெற்றுள்ளது.

நமது தமிழ்நாட்டில் 107.75 இலட்சம் பசுக்களும் 28.79 இலட்சம் பால் கறக்கும் எருமைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு பசுமாடு ஓர் ஆண்டுக்குக் கொடுக்கும். பாலின் சராாரி அளவு 200 லிட்டர்; ஓர் எருமை 283