பக்கம்:எங்கே போகிறோம்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் O 109

அடுத்து, கால்நடைப் பொருளாதாரத்தில் நமது கவனத்தை ஈர்ப்பது கோழி வளர்ப்பு. கோழிகளைக் கடுமையாகப் பாதித்த “கம்போரா” நோய்க்கு எதிராக நவீன தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 310 முட்டைகள் என்ற நிலைமை மாறி, தற்போது கூடுதல் முட்டையிடும் புதிய கோழியினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகக் கோழி முட்டைகள் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை கூடியதன் வழி முட்டை உற்பத்தி 682 மில்லியனிலிருந்து 1821 மில்லியனாக உயர்ந்துள்ளது. கோழி வளர்ப்பிலும் ஆழ்கூள முறை அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது.

கால்நடை பொருளாதாரத்தில் மீன் வளமும் அடங்கும். நீண்ட கடற்கரைகளையுடைய நமது நாட்டுச் செல்வத்தில் மீன் வளத்திற்குரிய பங்கு மிகப் பெரிது, கடல் மட்டுமல்ல. உள்நாட்டு நீர் நிலைகளிலும் மீன் வளர்ப்புப் பண்ணைகள் உண்டு.

ஒருங்கிணைந்த பண்ணைகளில் குட்டை இருந்து மீன் வளர்த்தல் நல்ல வருவாய் கிடைக்கும். மீன்கள் அடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன.

நமது நாட்டில் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் அதிகமாகப் பிடிபடும் மீன் வகைகளில் லோமியேர் வகையும் ஒன்று. இந்த மீனிலிருந்து ஊறுகாய் தயாரிக்கும் முறை-தொழில் நுட்பம் வந்துள்ளது. இங்ங்னம் தயாரிக்கப்பெற்ற ஊறுகாய் 240 நாள்கள் வரையில் கெடாது. ஏற்றுமதிக்கும் உரியது.

அண்மையில் பரவலாகப் பேசப்படுவது இறால் மீன் இறால் மீனின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து