பக்கம்:எங்கே போகிறோம்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 எங்கே போகிறோம்?

வருகிறது. செல்வவள நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியைத் திரட்டப் பயன்படுவது இறால் மீன் பண்ணைகள். இறால் மீனுக்குரிய பொருளியல் மதிப்பின் காரணமாகி இறால் “பழுப்புத் தங்கம்” என்றழைக்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைகள் வகிக்கும் பங்கு அளப்பரியது. கால்நடைப் பொருளாதாரம் பன்முனைப் பகுப்புடையது. கால்நடைகள், அறிவியல் தொழில் நுட்பத்துடன் வளர்க்கப் பெற்றால் நல்ல இலாபம் தரக்கூடிய் தொழில்.

குறைந்த முதலீட்டில் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடியது. அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துத் தரக்கூடியது. உள்நாட்டில் மக்களின் உணவுப் பொருள்களாகப் பயன்பட்டு, நீண்ட நெடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவி செய்யக்கூடிய சிறந்த தொழில்.

பால் மாடுகள், எருதுகள் விவசாயிகளுக்கு முழுமையாகப் பயன்படுகின்றன. மாடுகளின் தோல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவி செய்கிறது.

ஆடுகளும் கம்பளி உற்பத்திக்கும், வெறிநாய் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கும் பயன்படுகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் (C tgut) தயாரிக்க உதவுகிறது. பன்றிகளின் இறைச்சி இருதய வால்வுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இங்ஙனம் குடும்பப் பொருளாதாரத்திலும் நாட்டுப் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதும், மனித குலத்துக்கு எண்ண்ரிய நன்மைகளைச் செய்து வருவதுமாகிய கால்நடைகளைப் போற்றுவோம்! வீடுகள்தோறும் பசுமாடுகளை வளர்த்து வளமுடன் வாழும் திசையில் செல்வோம்!


24-9-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை