பக்கம்:எங்கே போகிறோம்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு O 113

கூட்டுறவு இயக்கம் அரசாங்க இயந்திரத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருக்கிறது.

இழப்புக்கும், ஈட்டத்திற்கும் பொறுப்பேற்காதவர்கள் மேலாண்மைப் பொறுப்பை ஏற்கிறார்கள். கூட்டுறவில் அமைந்துள்ள உள்ளீடான ஜனநாயக மரபுகள் அழிக்கப்படுகின்றன.

இன்றைய இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் கூட்டுறவு வடிவமைப்பைக் கொண்டுள்ளனவே தவிர, உணர்வால் கூட்டுறவு நிறுவனங்களாக விளங்கவில்லை. இந்தக் குறைபாட்டிலிருந்து ஓரிரு கூட்டுறவு நிறுவனங்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு, நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அரசு அலுவலர்களின் சமூகச் சிந்தனையும், ஆர்வமுமே காரணம்.

கூட்டுறவு இயக்கங்களை மக்களே கண்டு, தொடக்கத்திலிருந்து நடத்தி, நேரிடையாக என்று பங்குகொள்கிறார்களோ, பயனடைகிறார்களோ, அன்றுதான் கூட்டுறவு இயக்கம் வெற்றி பெறும்.

நமது நாடு விடுதலை பெற்ற நாள் முதல் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டு வருவது “நமது இலட்சியம் கூட்டுறவுப் பொதுநலச் சமுதாயம்” என்பது. ஆனால், இந்தத் திசையில் இன்று நாம் செல்லவில்லை. வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ சமுதாய அமைப்பை நோக்கியே நாடு போய்க்கொண்டிருக்கிறது. வறுமைக் கோடு என்று ஒன்று நீளுகிறது. அல்லது உயர்கிறது. இந்தப் போக்கு மாற “கூட்டுறவுப் பொதுநலச் சமுதாயம்” காண்பதே வழி; வேறு வழி இல்லை.

மக்கள் எந்தச் சூழ்நிலையிலும், பொருளாதார அடிப்படையில், ஒருவரைச் சார்ந்தில்லாமல், தாமே வாழ