பக்கம்:எங்கே போகிறோம்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114 எங்கே போகிறோம்?

முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த, கூட்டுறவுப் பொருளாதாரச் சமுதாயத்தினால் மட்டுமே இயலும்.

மேலும் பிற பொருளாதார அமைவுகளில் பொருள் கிடைத்தாலும் ஆன்மா வளர்வதில்லை: ஆட்சித்திறன் வளர்வதில்லை. சமூகம் ஒருங்கிணைந்து வாழ்வதற்குரிய பண்பு நலன்கள் வளர்வதில்லை. கூட்டுறவுத் துறையில் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி உண்டு. ஒரு நல்ல கூட்டுறவாளன் வறியோரை- நலிந்தோரை அவமதிக்க மாட்டான்.

பொருளாதார முயற்சிகளில் கூட்டுறவுக்கு என்று தனியே எதுவும் இல்லை. எத்துறையிலும் கூட்டுறவு அடிப்படையில் பொருளாதார முயற்சிகளைத் தொடங்கலாம். குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சிறுதொழில் முதலியன கூட்டுறவு முறையில் தொடங்கலாம்.

நமது நாட்டில் வேளாண்மைத் தொழில் கூட்டுறவு முறையில் அமைவது நல்லது. நமது நாட்டில் மிகச் சிறு விவசாயிகளும், சிறு விவசாயிகளுமே எண்ணிக்கையில் மிகுதி. இந்த விவசாயிகள் தங்களின் சிறு சிறு துண்டு நிலங்களில் நவீன சாதனங்களைப் பயன்படுத்த முடியாது. வேலை நாட்களும் அதிகம் பிடிக்கும். இதைத் தவிர்க்க 1000 ஏக்கர் நிலப் பரப்பளவில் ஒரு கூட்டுறவு விவசாயப் பண்ணை என்று அமைத்துக் கொண்டால் நவீன விவசாயக் கருவிகளை எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியும். ஒரு விவசாய விஞ்ஞானியைக் கூட முழுநேரப் பணியாளராக அமைத்துக் கொள்ள இயலும். விவசாய வேலையில் நாள்களும் குறையும்.

தரமான கூடுதல் விளைச்சலைத் தரக்கூடிய அளவுக்கு விவசாயத்தைப் புதிய தொழில் நுட்பத்துடன் செய்ய