பக்கம்:எங்கே போகிறோம்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு O 125

மெல்லாம் கூட்டுறவு அடிப்படையில்தான் என்பது வரலாறு. இந்த நினைப்பு-சிந்தனை, நமக்குக் கூட்டுறவின் பால் ஈடுபடத் தூண்டும்.

சில இடங்களில் கூட்டுறவு தோல்வி அடையலாம். இந்தத் தோல்விக்குக் காரணம் உள்ளார்ந்த கூட்டுறவு உணர்வு இல்லாமையே. தோல்விகளைக் கண்டு துவள வேண்டிய அவசியம் இல்லை. உயிர்ப்பும், உறவும், கூட்டுறவுப் பண்பும் உடையவர்கள் எந்தச் சூழ்நிலை யிலும் வெற்றி பெற்று விடுவார்கள். இது உறுதி.

ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்!
ஒன்று சேர்ந்து உண்போம்!
ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்!
ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்!
எவரையும் வெறுக்காமல் இருப்போம்!

கூட்டுறவின் வழி வளம் காண்போம்! வாழ்விப்போம்! வாழ்வோம்! இதுவே நாம் செல்லவேண்டிய வழி-தடம்!


1-10-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பான உரை