பக்கம்:எங்கே போகிறோம்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136எங்கே போகிறோம்?

ஆட்சி, நீதியைச் சார்ந்திருந்தது. அந்த நீதி சார்ந்த ஆட்சிமுறையை நாம் தொடர்ந்து காப்பாறற வேண்டும்.

“ஒரு குலத்துக்கு ஒரு நீதி” என்ற கொள்கையை மறுத்து வளரும் நாம் “ஆட்சிக்கு ஒரு நீதி” என்ற முறையை மேற்கொள்ளக் கூடாது. மிக உயர்ந்த தரமான மக்களாட்சி முறையை நாம் நடத்தவேண்டும். தேர்தலில் மட்டும் ஜனநாயகமல்ல. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பெருநெறி நமது நாட்டு அரசியலில் -ஆட்சியில் இடம்பெற வேண்டும்.

பொற்கைப் பாண்டியன் வரலாறு கண்ட நாடு நமது நாடு. இந்த நாட்டில் காவல்துறைக்கு மகத்தான் பொறுப்புள்ளது. காவல்துறை அதன் ஒழுகலாறுகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் போலீசு ஆட்சி வருவதை, போலீசுக்காரர்களும் விரும்ப மாட்டார்கள். இது நம்முடைய நம்பிக்கை. ஏன்? கோபுரத்திற்குக் கலசம் போல, நாட்டிற்குக் காவல்துறை அமையவேண்டும்.

மக்கள், நாட்டின் வளர்ச்சியில் தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் பங்கேற்க வேண்டும். நம்முடைய நாடு சட்டத்தால் ஆளப்படுவது. ஆதலால், சட்டத்திற்கு மக்கள் மதிப்பளித்து ஒழுகவேண்டும்; நடந்து கொள்ள வேண்டும். சட்டங்களும் விதிமுறைகளும் மதிக்கப்படும் நாட்டில்தான் மக்களாட்சி முறை பயன் தரும். சட்டத்தை முடமாக்குவது அராஜகத்திற்கு வழிவகுக்கும்.

நம்முடைய நாட்டில் தேசியக் குடிமைப் பண்புகளைப் போற்றி வளர்ப்போம்! அரசின் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்போம்! அரசு தீட்டும் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உடன் நிற்போம்! அரசின் அந்நியக் கடன்களைக் குறைக்க, சிறுசேமிப்பில்