பக்கம்:எங்கே போகிறோம்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு 145

கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஒளவையார், “பகடுதரு செந்நெல் போரொடு நல்கி” என்று பாடுகின்றார். கல்லாடனாரும் “பகடு தரும் பெரு வளம்” என்று போற்றுகின்றார். அதாவது, எருதுகள் - உழுது உண்டாக்கிய செந்நெல் வளமும், பல்வகை நுகர்வுப் பண்டங்களும் பெருவளம் எனப்பட்டன். பொருநராற்றுப்படை,

“சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவேரி புரக்கும் நாடு”

என்று காவிரி நாட்டின் சிறப்பினைக் கூறும் ஒரு வேலி நிலம் 6.2/3 ஏக்கர். ஒரு ஏக்கருக்கு விளைவு 150 கலம் நெல் அதனால் வளம் கொழித்திருந்தது. பசித்தவர்க்கு இல்லை யெனாது உணவு கிடைத்தது. நாலடியாரும் “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க” என்றது. தமிழ் இலக்கிய உலகம் சமுதாய மேம்பாட்டுக்குரிய பொருள் ஆக்கம் வேளாண்மை மூலமே எனக் கூறியது. திருவள்ளுவரும்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்” - என்றார்.
புரட்சிக் கவி பாரதி,
“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்!”

என்றான். செந்தமிழ்ப் புலவர்களிலேயே சங்கப்பாடல்கள் இயற்றிய புலவர்களில் ஒருவர் பெயர் ஓரேருழவர் என்பது. இவருடைய இயற்பெயர் தெரியவில்லை . செல்வ மேம்பாட்டில், பொருளாதார ஆக்கத்தில் பாம்புமலை சிறந்திருந்தது. பறம்புமலையை வேள்-