பக்கம்:எங்கே போகிறோம்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 எங்கே போகிறோம்?

வாழச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களிடத்தில் ஒழுக்கக் கேடுகள் இருந்தால் அதற்குரிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.

“நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”

என்று பாடினார் பொன்முடியார்.

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையில் தோன்றி மலர்ந்தவை. வாழ்க்கையை வளர்த்தவை. வையத்துள் "வாழ்வாங்கு வாழ, தமிழிலக்கியங்கள் வழிகாட்டுகின்றன! பழந்தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள்! நச்சு இலக்கியங்களைப் படிக்காதீர்! நச்சு இலக்கியங்கள் காட்டும் - திசையில் போகாதீர்! பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டு நெறியில் செல்வோமாக!


15-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை