பக்கம்:எங்கே போகிறோம்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போக வேண்டும்? 159

இந்த உலகத்தின் போக்கு வினோதமானது. இந்த உலகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவர்கள் எதையும் செய்ய இயலாது. அதனால்தான் இன்று புகழ் என்பது விளம்பரமாக, தம்முடைய கையாட்களை வைத்துச் செய்து கொள்வதாயிற்று. அண்ணல் ஏசு முதல் அண்ணல் காந்தியடிகள் வரையில் அப்பரடிகள் முதல் அருட்பிரகாச வள்ளலார் வரையில், உலகம் அங்கீகரிக்கவில்லை மாறாகத் துன்புறுத்தியது.

ஆதலால் நீ வாழ ஆசைப்பட்டால் வாழ முற்படு! வாழ்க்கையின் குறிக்கோளை நிர்ணயம் செய்து கொள்! குறிக்கோளை அடையத் தளர்ச்சியின்றி முயற்சி செய்; நாளும் உழைப்பை, முயற்சியை, வளர்த்துக்கொள்! வாழ்வாய்! மற்றவர்களையும் வாழ வைப்பாய்!

இப்பிறவி நமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. வாய்ப்பு எப்போதும் வராது. தொடர்ந்தும் வராது. அது நமக்காகக் காத்துக்கொண்டும் நிற்காது. வாய்ப்பு இருக்கும் திசையை நாடுங்கள் எது வாய்ப்பு-நல் வாய்ப்பு என்று இனங்கண்டு கொள்ளும் திறமை வேண்டும்.

வாய்ப்புக்களைத் தேர்வு செய்து ஏற்பதில்தான் வெற்றி இருக்கிறது. வாய்ப்புக்களைக் கவனிக்காமல் அதனைத் தாண்டி நாம் போய்விடக் கூடாது. அது போலவே நம்மைத் தாண்டி வாய்ப்பு போக அனுமதிக்கக் கூடாது. “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி; மதித்திடுமின்” உளதாகும் சாக்காட்டை விரும்புங்கள்! வளருங்கள்! வாழுங்கள்!

ஒரு நாடு நல்ல குடிமக்களைப் பெற்றிருந்தால்தான் அந்நாடு வளரும் புகழ்பெறும் இன்று நமது நாட்டில்

எ-11