பக்கம்:எங்கே போகிறோம்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முனைவர். த. பெரியாண்டவன் எம்.ஏ. பிஎச். டி.,

தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநர், சென்னை.


அணிந்துரை


நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாக கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர்.

ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணூற்று நான்காம் ஆண்டு பல்வேறு நாட்களில் சுதந்திர தினவிழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள், உழைப்புச் சிந்தனைகள், வளர்ச்சி மாற்றம், பொருளாதாரச் சிந்தனைகள், வேளாண்மைச் சிந்தனைகள், கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் உட்பட பனிரெண்டு வெவ்வேறு பொருண்மைகளில் எங்கே போகிறோம் என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு விடை கண்டு மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தின் மீது அறிவுக் கதிர் ஒளி பாய்ச்சி எழுப்ப முயன்றிருக்கும் சொற்பொழிவுகளே எங்கே போகிறோம்? என்னும் மலர்த் தோப்பாக வெளிவருகிறது. “தன் மாணாக்கன் அணிந்துரை வழங்கலாம்” என்னும் மரபுப்படி தவத்திரு அடிகளார் அவர்களின் மாணாக்கன் நிலையிலுள்ள நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எங்கே_போகிறோம்.pdf/5&oldid=1126186" இலிருந்து மீள்விக்கப்பட்டது