பக்கம்:எங்கே போகிறோம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதற்கு அணிந்துரை வழங்குவதை பெரும் பேறாக கருதுகிறேன்.

காலால் நடக்கும் மனிதன் பிற கால்நடைகளிலிருந்து சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும் நடந்து வேறுபடுகிறான் என விளக்கும் பாங்கு போற்றி பாராட்டிற்குரியது. (பக்கம் 10).

சுதந்திர தின விழாப்பற்றி விளக்கும்போது, சுதந்திர தின விழா என்பது கொடியேற்றுதல் மட்டுமன்று நேற்று. என்ன நடந்தது. இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது. நாளை என்ன நடக்கும், நாளை என்ன நடக்குமாறு செய்யவேண்டும் இந்தக் கணக்காய்வு செய்யாமல் போனால் சுதந்திர தின விழாவிற்கு என்ன பொருள் என வினவுவதை விடுதலை நாளில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விளக்க உரையாகும்.

தாம் நரகத்திற்கு போனாலும் கோடான கோடி பேர் வைகுண்டத்திற்குப் போகவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட இராமானுஜர் பிறந்த மண்ணில் சுயநலம் வளர்ந்து வருகிறதே என அடிகளார் சோர்வு கொள்கிறார். இளைஞர்களின் உணர்வுகளை புறக்கணிக்காது வளர்க்க வேண்டுமெனவும் மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும் எனவும் இவர் கூறும் அறிவுரைகள் பொன்னேட்டில் வைரங்களால் பதிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள்.

கல்விச்சிந்தனைகள் என்னும் பொருளில் படிப்புவேறு, என அறிவு வேறு தெளிவுபடுத்தி தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள் இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாக கருதிக் கொண்டிருக்கிறோம். இவர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எங்கே_போகிறோம்.pdf/6&oldid=1126187" இலிருந்து மீள்விக்கப்பட்டது