பக்கம்:எங்கே போகிறோம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 ◯ எங்கே போகிறோம்?

காலத்தின் தேவைக்கேற்ப, மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி அடையவேண்டும்.

சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாத வளர்ச்சியினால் என்ன பயன்? இன்று நம் நாடு வளர்ந்துள்ளது. நமது நாட்டு சராசரி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே!

வாழ்க்கைத்தரம் உயரும்வரை வளர்ச்சிக்குரிய முயற்சிகள் இடையீடின்றி நடக்கவேண்டும். மக்கள் நலவளர்ச்சிப் பணிகளில் பழையபோக்கில் உள்ளவர்களும், புத்தறிவு பெற்றவர்களும் ஒருமை எண்ணத்துடன் ஈடுபடுவார்கள் ஆயின் வெற்றி எளிது.

இன்று நாம் சென்று கொண்டிருக்கும் பாதையில் வளர்ச்சியின் வேகம் போதாது. மாற்றங்கள் அறவே ஏற்படவில்லை. நாம் வாழும் காலம், பேராற்றல் வாய்ந்தது. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கின்றோம். காலத்தின் பேராற்றலை முறையாகப் பயன்படுத்தினால் வளர்ச்சி உறுதியாக வாய்க்கும். காலவேகத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சிப்பணிகள் நிகழ வேண்டும்.

சமுதாயம் தனது வேலைசெய்யும் பாங்கையும் விரைவுபடுத்திக்கொள்ள வேண்டும். கால வேகத்திற்கு ஏற்ப, சமுதாயம் தனது வேகத்தைக் கூட்டிக்கொள்ளத் தவறினால் சமுதாயம் பின்தங்கிவிடும். ஆதலால், விவேகத்துடன் வேகமாக நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்வோமாக!

நாம் கடுமையான விதிமுறைகளையும், கடின உழைப்பையும் மேற்கொள்ளாவிட்டால் 2001-லும் இப்படித்தான் இருப்போம்! தலையின்மீது வறுமைக் கோடு கடன்சுமை! நியாயவிலைக் கடைகளின் முன்