பக்கம்:எங்கே போகிறோம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்ச்சி-மாற்றம் 63

நீண்ட வரிசை இந்த அவலம் நமக்கு வேண்டுமா? வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

அறியாமையை அகற்றி, வறுமையை அறவே அகற்றி, உரியவளர்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் தருவோம்! நமது முன்னேற்றத்திற்கு வளர்ச்சியும் மாற்றமும் தேவை. நமது பழக்கங்களில் அணுகுமுறையில், வேலைசெய்யும் பாங்கில் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் வளர்ச்சி நிகழும்; வாழ்வு சிறக்கும்; பழைய பைத்தியம் படீர் என்று தெளிய வேண்டும்.

புதிய இந்தியாவை, வளம் நிறைந்த இந்தியாவை உருவாக்க உறுதிகொள்வோம். இன்றுள்ள தேக்கமும் பின்னடைவும் நீங்கி வளர்ச்சியும் முன்னேற்றமும் உறுதிப் படுத்தப் பெறும், புதியவழியில் செல்வோம்! மாற்றமும் வளர்ச்சியும் காண்போம்!


3-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை