பக்கம்:எங்கே போகிறோம்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. வேளாண்மைச் சிந்தனைகள்


இன்றைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? வேளாண்மைப் பொருளாதார வகையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? நாம் எங்கே போக வேண்டும்? நமது நாடு வேளாண்மை நாடு. வேளாண்மைக்குரிய நிலப்பரப்பு, நிலவளம், மனித சக்தி மிகுந்த நாடு. நமது இலக்கியங்களில், காப்பியங்களில் தவறாமல் வேளாண்மையைப் புகழ்ந்து பேசாத கவிஞர்கள் இல்லை.

ஆனால், இன்றைய தலைமுறையில் வேளாண்மைத் துறையில் போதிய ஆர்வம் இல்லை! அரசுப் பணிகளை விட, வியாபாரத்தைவிட விவசாயம் இரண்டாந்தரத், தொழில் என்று கருதப்படுகிறது. இது முற்றிலும் தவறு.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” என்றும்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”

என்றும் திருக்குறள் கூறுகிறது.

உடலோடு கூடிய உயிர் வாழ்க்கைக்கு உணவுப் பொருள்கள் இன்றியமையாதன. உணவுப் பொருள்களை வழங்குவது விவசாயத் தொழிலே! அதனாலேயே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.

நடைமுறையில் பால் தரும் பசு, புண்ணியமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், தமிழர் வாழ்வியலில் எருதே முதன்மை பெற்றுள்ளது. நாம் வணங்கும் கடவுள்-சிவபெருமான், தனது ஊர்தி