பக்கம்:எங்கே போகிறோம்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84 O எங்கே போகிறோம்?

யாகவும், உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும் பயன்படுத்துவது எருதுதான் என்பதை உணர்க. திருக்கோயில் முகப்பில் வரவேற்பது உம் எருதே!

“உழுத நோன் பகடு அழிதின்றாங்கு”

என்ற புறநானூற்று வரி, என்றும் போற்றத்தக்க வரி. உழுததின் பயனாகிய செந்நெல் லரிசியை, செங்கரும்பின் சாற்றை மனித உலகத்துக்கு உண்ணக் கொடுத்துவிடும் பண்புடையவை எருதுகள். ஆதலால்தான், தமிழர் வாழ்வில் பொங்கல் விழா உழவர் திருநாளாக உருக் கொண்டது.

மனிதன் உண்டு உயிர் வாழ்தலுக்கு ஒரு நாளைக்குச் சராசரி எவ்வளவு உணவு-கூட்டுணவு தேவையோ அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் வலிமையிழந்து நிற்கின்றான். நமது நாட்டில் உணவுப் பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கும் திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அன்றாடத் தேவைக்குரிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதைக் கூடுதலாக்க வேண்டும்.

இலாப நோக்கில் பணப் பண்டங்களை உற்பத்தி செய்வதையும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களையும் கண்மாய்களையும் பற்றிக் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும். ஊட்டி வளர்க்கும் தாய் போன்றது நிலம். உணவளிப்பவர்கள் விவசாயிகள்! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

நமது இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் கணிசமான பங்கைப் பெற்று வந்துள்ளது, பெற்று வருகிறது. நமது நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கு 39 விழுக்காடு. அது மட்டுமல்ல.