பக்கம்:எங்கே போகிறோம்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 எங்கே போகிறோம்?

ஏற்படுவதேயாகும். மண் அரிப்பு, மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதே! தடைபடா மண் அரிப்பு, வறுமைக்குரிய வாயில், சமுதாயத்தின் வலிமைக்கும் பொருளாதாரச் செழிப்புக்கும் உலைவைக்கும்.

இன்று நம்முன் உள்ள தலையாய பிரச்சனைகளுள் ஒன்று, உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சனைகளுள் தலையாயது மண் அரிப்பேயாகும். மண் அரிப்பு, இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். ஆதலால்,

நிலத்தினை உழாமல் தரிசாகப் போடாதீர்!

நிலத்தினை மேடு பள்ளமாக அமைய விடாதீர்!
சமநிலைச் சமுதாயம் காண முதல் முயற்சி,
சமநிலை நில அமைப்பு!
பெய்யும் மழை நீர்,
நின்றும் நிற்காமலும்
மெல்ல நிலமகளைத் தழுவி ஓடச் செய்வீர்!
மனிதனுக்கு ஆடைபோல
நிலத்திற்கு ஒரு பசுமை, போர்வை!
கண்டபடி ஆடு மாடுகளைக்
கட்டுப்பாடில்லாமல் மேயவிடாதீர்!
விரைவில் கொள்ளை லாபம் தரும் எதுவும்
அழிவையே தரும்.
காடுகளை அழிக்கும் வெள்ளாடுகளைத் தவிர்ப்பீர்!
நிலத்தை ஊட்டி வளர்க்கும்
செம்மறியாடுகளைச் சேர்த்திடுவீர்!