பக்கம்:எங்கே போகிறோம்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேளாண்மைச் சிந்தனைகள் O 91

காற்றுத் தடுப்பு மரங்களை
வேலிகள் தோறும் நடுவீர்!
காலத்தால் அமைந்த மண்வளத்தை இழக்காதீர்!
மண்வள இழப்பு,
மனிதகுலத்திற்கு அழிவு என்று உணர்வீர்!

நம்முடைய விவசாயப் பாதிப்புக்கும் வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரப் பாதிப்புக்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, வறட்சி.

நமது நாட்டில் பெய்யும் மழை 76 சென்டி மீட்டருக்கும் குறைவு. இந்தியாவில் பெய்யும் மழையைத் தென்மேற்கிலிருந்து வீசும் காற்று இந்துமாக் கடலில் படிந்து நீர் சுமந்துகொண்டு வந்து தருகிறது. இதுவே, தென்மேற்குப் பருவக் காற்று மழை. தென்மேற்குப் பருவ மழையே பெய்யும் மழையில் பெரும் பகுதி, தோராயமாக 75 விழுக்காடு.

அடுத்துப் பெய்வது வடகிழக்குப் பருவ மழை. ஒரு ஆண்டில் 76 சென்டி மீட்டருக்கும் குறைவாக மழை பெய்தால் அந்தப் பகுதி வறட்சியால் பாதிக்கும்.

நம் தமிழ்நாடு இவ்வகையில் பாதிப்புக்குள்ளாவது. இங்ஙனம் வறட்சியால் பாதிப்பதைத் தவிர்க்கவும். மழையை கூடுதலாகப் பெறவும் காடுகளின் அளவைக் கூடுதலாக்க வேண்டும். வேளாண்மை முறைப்படி மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடு இருக்க வேண்டும். இப்போது அவ்வளவு இல்லை.

பெய்யும், குறைந்த மழைத் தண்ணீரை முறையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கோடை மழை—தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் நிலத்தை