பக்கம்:எங்கே போகிறோம்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேளாண்மைச் சிந்தனைகள் O97

நிலங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் மேம்பாடு அடைய வேண்டும்.

விவசாயத்தைப் பன் முகமாகச் செய்தால்தான் நெல், பழமரங்கள், தென்னை, காய்கறிகள் என்று நிலத்தைப் பிரித்துச் சாகுபடி செய்தால்தான் ஆண்டு முழுவதும் வருமானம் வரும்.

கூடுதலான நிலப்பரப்பில் வியாபார ரீதியான பழங்கள், தென்னை போன்றவைகளை உற்பத்தி செய்தால்தான் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் அந்நியச் செலாவணியை அதிகமாக அடைய முடியும்.

வேளாண்மைத் தொழில் எல்லாத் தொழிலையும் விடச் சிறந்தது; சுதந்திரமானது; நிலையானது. விவசாயப். பொருள்களின் விலை நிர்ணயம், உற்பத்தி செய்த பொருள்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு உரிய ஏற்பாடுகள் தேவை.

வேலை தேடிப் போக வேண்டாம்
வேளாண்மையில் ஈடுபடுவோம்!

17-9-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பான உரை.