பக்கம்:எண்ணக்குவியல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெல்லும் சொல்

17

 தம்பி! எழுது! உன்னால் எழுத இயலும், உனது முதல் கட்டுரை, நீ கண்ணாற்கண்ட காட்சிகளை உன் நண்பர்களுக்கு நீ எழுதும் கடிதமாக இருக்கவேண்டும். பிறகு பல சொற்கள், உரைகள் உனது கட்டுரையில் கட்டப்படும், பூக்கட்டுவது போல்வதுதான் சொல் கட்டுவதும், பல உரைகளைக் கட்டுவதனால், அது கட்டுரையாகி மிளிர்கிறது. ஆனால், ஒன்றை மறந்து விடாதே! உனது கட்டுரையுள் கட்டப்படும் சொற்களை விட வேறு வெல்லும் சொற்கள் இல்லாதிருக்க வேண்டும். உண்மையும் உணர்ச்சியும் இருந்துவிட்டால், அக்கட்டுரையுள் உயிர் நடமாடும் என்பதை உணர்ந்து கொள்! நம்பு! பிறகு எழுது!

மறுமலர்ச்சி எழுத்தாளனாய் இருக்க விரும்பினாலும் விரும்பு, அது பாவமான காரியங்களில் ஒன்றன்று, ஆனால், அதற்காகக் காதல் கதைகளை எழுதிக் கொண்டிராதே. இன்னும் காதல் கதைகள் என்ற சாக்கில், நிழலில். காமக்கதைகள் எழுதுவோரைக் கண்டால், அவாகள் நட்பிலிருந்து சிறிது விலகி நில், அதைவிட நல்லது. அவர்களைத் திருத்துவது இயலாதபோது எல்லாவற்றிலும் நல்லது. அவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்வதேயாகும்.

எழுதுவதற்கு எத்தனையோ துறைகள் உண்டு. கல்வி, கைத்தொழில். வாணிகம், அரசியல், விஞ்ஞானம், உடல்நிலை. பொருள்நிலை, பயிர், அறிவு, ஆராய்ச்சி, சீர்திருத்தம், ஒழுக்கம் ஆகிய பன்னிரு துறைகளும் இன்னும் அழிந்து விடவில்லை. அவற்றுள் ஒன்றிலோ, இரண்டிலோ நுழை. எதை எழுதினாலும் எழுது! ஆனால், ஒரு வேலைத் திட்டத்தை முன்னே வைத்துத் தான் எழுத வேண்டும். உன்னால் அது இயலாவிடில், என் கட்டுரையின் படிப்பினை என்ன? அதனால் நாட்டுக்கு

எ.கு.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/18&oldid=1252987" இலிருந்து மீள்விக்கப்பட்டது