பக்கம்:எண்ணக்குவியல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நாட்டில் சீர்திருத்தக் குளம் ஒன்றை வெட்டி, அதனுள் தீந்தமிழ் ஊற்றதனைக் கண்டு' நல்லொழுக்க நீர் நிறையச்செய்து, என்றும் நன்மை விளை மலர்தனையே விளைத்து, பார்முழுதும் அந் நீரைப் பருக அதனுள் பகையாமைதனை வளர்த்து வாழ்வோம். வாழட்டும் பகையாமை! அழியட்டும் பொறாமை.

ஆமை

"மை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படா” என்பது நம் தமிழ்நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. 'அமீனா புகுந்த வீடு உருப்படாமற்போவது பலரும் நன்கறிந்த உண்மை. ஆனால், 'ஆமை புகுந்த வீடு எவ்வாறு உருப்படாமற் போகும்!' என்ற ஐயப்பாடு எவர்க்கும் எளிதாகவே தோன்றும்.

"ஆமை யானையைப் போன்ற பெரிய உருவமுடையது மன்று; சிங்கம் முழங்குவது போன்ற முழக்கத்தையும் அது செய்வதில்லை, பாம்புக்கு இருப்பது போன்ற நஞ்சும் அதற்கில்லை. அது நான்கு குறுகிய கால்களையும் மறைத்துக் கொள்ளும் தலையையுமுடைய ஒரு சிறிய உயிர்! அது புகுந்தால், அந்த வீடு எவ்வாறு பாழாகும்?" என்பது நியாயமான கேள்வியே. இந்த ஐயப்பாட்டை நீக்கப் பேரும் புகழும் பெற்ற கிறித்தவப் பாதிரியார் ஒருவர் ஒரு புதிய பொருளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/25&oldid=1253002" இலிருந்து மீள்விக்கப்பட்டது