பக்கம்:எண்ணக்குவியல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

எண்ணக் குவியல்

மூவறிவு உயிர், ஈரறிவு உயிர், மூவறிவு உயிர், நாலறிவு உயிர் எனக் குறிப்பிட்டுக் கூறினரேயன்றி, அறிவில்லாதவை எனக் கூறியதே இல்லை.

தம்பி ஒவ்வொருவருக்கும்! அறிவு இருக்கிறது என்பதை நீ முதலில் ஒப்புக்கொள்! அந்த அறிவைப் பட்டை தீட்டப்படும் ஒரு வைரக் கல்லுக்கு ஒப்பிடு! அதை அவரவர் தத்தம் முயற்சியால் உலகமாகிய சாணைக்கல்லில் தீட்டியே வருகிறார் என்றும் நினை! எந்தப் பக்கத்தில் தீட்டுகிறார்களோ, எவ்வளவுக்குத் தீட்டுகிறார்களோ, எத்தனை பட்டை தீட்டுகிறார்களோ, அத்தனை பட்டைகளிலும் அவ்வளவுக் கவ்வளவு அது ஒளி வீசும் என்று கருது!

ஒருவன், தன் அறிவை வர்த்தகச் சாணையில் தீட்டிக் கொண்டு வியாபாரியாய் உட்கார்ந்திருப்பான். மற்றொருவன், தன் அறிவைப் புலமைச்சாணையில் தீட்டிக்கொண்டு புலவனாய்க் கவிபாடிக் கொண்டிருப்பான். வேறொருவன், விவசாயச் சாணையில் தீட்டிக் கொண்டு குடியானவனாய்த் தோன்றுவான். இன்னொருவன், வைத்தியச் சாணையில் அறிவைத் தீட்டிக்கொண்டு மருத்துவனாய்க் காட்சியளிப்பான், இன்னும் ஒருவன் தனது அறிவைத் திருட்டுச் சாணையில் தீட்டிக்கொண்டு திருடனாய் இருந்து வருவான், ஒருவன். பத்திரிகை நிலையத்தில் திட்டுகிறான்; ஒருவன் பலகாரக் கடையில் திட்டுகிறான், ஒருவன் கட்டுரை எழுதத் தீட்டுகிறான்: ஒருவன் கன்னம் வைக்கத் தீட்டுகிறான். எவனெவன் தனது அறிவை எந்தெந்தப் பக்கத்தில், எந்தெந்தச் சாணையில் தீட்டுகிறானோ, அவனவன் அந்தந்தத் துறையிலே ஒளிவீசி நிற்பான்.

இந்தியாவுக்கு வந்திருந்த மேல்நாட்டுத் தொழிலறிஞர் ஒருவர், தமிழ்நாட்டுப் பட்டு ஜரிகை நெசவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/31&oldid=1254047" இலிருந்து மீள்விக்கப்பட்டது