பக்கம்:எண்ணக்குவியல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

எண்ணக் குவியல்

 ஆராய்ச்சி : மயிற்கண்கள்’ என்று சொல்லப்பட்டு வருவது மயிலின் முகக் கண்களா? தோகைக் கண்களா? உங்களுக்குத் தெரியுமா? தெரியாதவர்கள் எப்போதேனும் மயிலைக் காணும் பொழுது கூர்ந்து பாருங்கள். மயிற்கண்கள் என்பது இரண்டையுமே குறிக்கும். தோகைக் கண்களும், முகக்கண்களும் ஒன்று போலவே தோன்றும். இந்த ஆராய்ச்சியின்போது உங்கள் கண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!

அழகு : 'ஆண் அழகா? பெண் அழகா?’ என்பது இக்காலத்துக் கேள்விகளுள் ஒன்று! பெண்களே அழகுடையவர்கள் என்பது பொதுவாக வழங்கி வரும் கருத்து. ஆடவரே அழகுடையவர்' என்பது இன்றைய போராட்டக்காரர்களின் கருத்து. இதற்குப் பறவைகளும் விலங்குகளும் கூடச் சான்றுகளாக இருந்து வருகின்றன.

ஆண் யானை (களிறு) ஆண் மாடு (காளை)

ஆண் ஆடு (கடா) ஆண் மான் (கலை)

ஆண் கோழி (சேவல்) ஆண் மயில் (தோகை)

எது அழகு ஆணா, பெண்ணா?

விருந்து : மேல்நாட்டு மன்னன் ஒருவன் 1550 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விருந்து செய்தான். அவன் விருந்து செய்த உணவுப் பொருள் என்ன தெரியுமா? மயில் மூளை விருந்துண்ட மக்கள் 400 பேர்கள்! கொலையுண்ட மயில்கள்??? மன்னனின் மூளையே மூளை!

மருந்து : வாந்தியை நிறுத்தவும் குமட்டலை நிறுத்தவும் என்ன செய்யலாம் எனத் தமிழ்நாட்டு மருத்துவ அறிஞர்கள் எண்ணி ஆராய்ந்தார்கள். இறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/37&oldid=1253515" இலிருந்து மீள்விக்கப்பட்டது