பக்கம்:எண்ணக்குவியல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்கற்பனையும், கற்பனையால் விளைந்த நம்பிக்கையும், நம்பிக்கையை வலுவாக்கத் தேடிக் கண்டுபிடித்த பொருள்களும், அப்பொருள்கள் ஒன்றுக்கொன்று துணைபுரியும் செயலும் ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணிப்பார்க்கும் பொழுது நமது உள்ளம் வியப்படைகிறது!

திருஷ்டி சுற்றுதல்

ம் நாட்டில் 'திருஷ்டி சுற்றுதல்' என்ற ஒரு பழக்கம் இருந்து வருகிறது. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வந்த போதும், பேசுவோர் மேடைக்குச் சென்று வந்த போதும், நடிகர்கள் நாடகத்தில் நடித்து வந்தபோதும் மணமக்கள் ஊர்வலம் சென்று வந்தபோதும், மன்னர்கள் வேட்டையாடச் சென்று வந்தபோதும் திருஷ்டி சுற்றுவது ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது.

'திருஷ்டி' என்பது வடசொல். 'கண் எச்சில்' என்பது அதன் தமிழ் மொழிபெயர்ப்பு. 'திருஷ்டி சுற்றுதல், என்பதை, 'சாந்தி செய்தல், கண் எச்சில் கழித்தல், கழிப்புக் கழித்தல், ஏற்றி இறக்குதல், ஆலத்தி எடுத்தல்,' என்ற பல சொற்றொடர்களாற் சொல்வதுண்டு.

திருஷ்டி சுற்றக் கையாளும் பொருள்கள் முச்சந்தி மண், மூன்று வீட்டுக் கூரை, உப்பு மிளகாய் சேர்ந்தவையும், சூடம் கொளுத்துதலும், திரிவிளக்கு ஏற்றுதலும் தேங்காயும், தேங்காய்க் குடுமித் துணி விளக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/40&oldid=1253032" இலிருந்து மீள்விக்கப்பட்டது