பக்கம்:எண்ணக்குவியல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

எண்ணக் குவியல்

மாவு அடைகளும், சோற்று உருண்டைகளும் பிறவும் ஆகும்.

ஆலத்தி என்பது மஞ்சள், சுண்ணாம்பு, வெற்றிலை இம்மூன்றையும் நீரிற் கலந்து தலையைச் சுற்றி எடுப்பதாகும்.

பண்டை மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்று மீண்டும் அரண்மனையை அடைந்தான். பரிசு பெற விரும்பிய புலவன் ஒருவன் அம்மன்னனிடம் கவி ஒன்றைத் தந்தான். அது இது;

மரமது மரத்தி லேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே மீண்டும் வன்மனைக் கேகும் போது
மரமதைக் கண்ட மாதர் மரமொடு மரமெடுத்தார்.

இதன் பொருள் : அரசமரம் மாமரத்தின் மீது ஏறி-அதாவது அரசன் குதிரை மீதேறி, அரசமரம் தோமரத்தைத் தோளில் வைத்து-அதாவது அரசன் தோமராயுதத்தைத் தோளில் தாங்கி (வேட்டையாடக் காடு சென்றான்); அரசமரம் வேங்கை மரத்தைக் கண்டு-அதாவது அரசன் வேங்கையைக் கண்டு; தோமரத்தால் வேங்கை மரத்தைக் குத்தி-அதாவது தோமராயுதத்தால் வேங்கையைக் குத்தி; மரமது வழியே,மீண்டுவன்மனைக்கு ஏகும்பொழுது-அதாவது அரசன் திரும்பி அரண்மனைக்கு வந்தபோது; அரசி மரத்தைக் கண்ட மாதர்கள்-அதாவது அரசனைக் கண்ட பணிப் பெண்கள்; மரமொடு மரமெடுத்தார்-ஆலமரமும் அத்திமரமும் எடுத்தார்கள்-அதாவது ஆல்-அத்தி ஆலத்தி எடுத்தார்கள் என்பதாம்.

வெற்றிக்கு உரிய செயல்களைச் செய்து வந்த போதும், புகழுக்கும் போற்றுதலுக்கும் உட்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/41&oldid=1253035" இலிருந்து மீள்விக்கப்பட்டது