பக்கம்:எண்ணக்குவியல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஷ்டி சுற்றுதல்

43

இதற்குமேல் யாவும் அறிந்த அறிஞர்களுட் சிலர் 'நம்பிக்கை நலம் தரும்' என்றும், மனிதனின் எண்ணத்திற்கும் சில வலிமைகள் உண்டு என்றும், 'மேல் நாட்டாரே இதை ஒப்புகின்றனர்' என்றும், நம்பிக்கைகளை உண்டாக்குவதற்காக இத்தகைய தந்திரங்களைச் செய்வதில் தவறில்லையென்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், எத்தனையோ பொருளற்ற மூடச் சடங்குகளுக்குள் இது ஒரு பொருள் உள்ள மூடச் சடங்காய் இருந்து வருகிறது என்பதும், அறிவு கலந்த வாழ்வுக்கு இத்தகைய முறைகள் தேவையில்லை என்பதும் நல்லறிஞர்களது கருத்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/44&oldid=1253038" இலிருந்து மீள்விக்கப்பட்டது