பக்கம்:எண்ணக்குவியல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் கண்ட வ.உ.சி.

45

மக்களின் மீதும் அன்பு கொண்டதுதான், இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும், முதல் வகுப்பும், முந்திரிப் பருப்பும், அல்வாவும், ஆரஞ்சுப் பழமும் கிடைக்குமென்பது. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும், செக்கு இழுத்துச் சீரழிய வேண்டுமென்பது. கற்கள் உடைபட வேண்டும்; இன்றேல். பற்கள் உடைபட நேரிடும், குற்றுவதெல்லாம் நெல்வாய் இருக்கும், உண்பதெல்லாம் களியாய் இருக்கும். இக்காலம். சிறைக்குச் சென்றவர்கள் போற்றுதலும் பூமாலையும் பெறுகிற காலம். அக்காலம் தூற்றுதலும் துயரமும் பெறுகிற காலம். முடிவாகக் கூற வேண்டுமானால், அக்காலம் எல்லாச் சாதியினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்து, "சமூக பகிஷ்காரம்" செய்த காலம் எனக் கூறலாம். அப்படிப்பட்ட காலத்திலேதான் திரு. பிள்ளை அவர்கள் சிறை புகுந்தார்கள். செக்கும் இழுத்தார்கள்; களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணிர் கேட்டு நீர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாள்கள் அல்ல-பல ஆண்டுகள். நாட்டுப்பற்றுக் காரணமாக உயிர்போகும் வேதனையைப் பெற்று வாடி வதங்கி வருந்தி உழைத்தவர் திரு.பிள்ளை அவர்கள்.

படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப் போனவரல்லவர் அவர்; அக்காலத்திலேயே கல்லூரியிற் பயின்று பட்டம் பெற்றவர். தொழிலில்லாமல் தேசத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தவர். வருமானமின்மையால் தேசபக்தி காட்டப் புறப்பட்ட வக்கீல்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர். தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்றுவந்தவர். புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டுப் பொதுத்தொண்டு செய்ய புறப்பட்டவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/46&oldid=1253040" இலிருந்து மீள்விக்கப்பட்டது