இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25 ........................எதைத் தேடுகிறாய்..?
ஒரே இல்லம்
திருமகளின்
நடனக்கால்கள்; - அன்பு
திதிக்கவரும்
உறவோர் கைகள்;
ஒருமனம்கொள்
நண்பர் தோள்கள் - குருவாம்
உத்தமனின் ஞானச் சுவடி;
பெருங்குடிகுற்றச்
சிறையின்பூட்டு; சாவின்
பிசகாத அம்பு - யாவும்
இருந்தொன்றாய்
வாழும் இல்லம் - நமது
எலும்பில்லா நாக்கின் நுனியே!
-1953
(கரு: நீதிசாரம்)